தமிழக செய்திகள்

Gen Z- Insta Reels ஆட்சி விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய்

முன்பு ரீல்ஸ் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள்.

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நன்றி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உண்மையிலே நீங்க மக்கள் மனச புரிஞ்சு வச்சிருந்தீங்கனா மக்களை இப்படி தப்பா பேசியிருக்கமாட்டீங்க.

அரசியல் புரிதல் இல்லாம, கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்றாங்க.

முன்பு ரீல்ஸ் பார்த்தவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள்.

சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் நிலையை உண்டாக்கியுள்ளோம்.

தற்குறி, தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

இதே மக்கள் தானே இத்தனை வருஷமா உங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க.

உங்களுக்கு மட்டும் வேற ஏதாச்சும் பிளானட்டில் இருந்து வந்து ஓட்டு போட்டாங்களா?

நீங்கள் மக்களை தப்பாக பேசினால், இந்த விஜய் கேள்வி கேட்பான், சும்மா இருக்க மாட்டான்

உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?

இவ்வாறு அவர் கூறினார்.