தமிழக செய்திகள்

குடியரசு தலைவரை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இன்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

அதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் முர்முவை முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். குடியரசுத் தலைவரை தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார்.

வரும் 12ம் தேதியன்று டெல்லியில் இருந்து முதலமைச்சர் விஜய் மங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிக்கை கோவிலுக்கு முதலமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.