எது நடந்தாலும் யார் மீது பழி போடலாம் என தேடிக்கொண்டு இருந்தால் எந்த மாற்றமும் வராது என முதலமைச்சர் விஜய் குறித்து கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," தான் ஆட்சியில் இருப்பது தெரியாமல் தற்போதைய பிரச்சனைக்கு முந்தைய ஆட்சியை குறைகூறி பேசுகிறார் முதலமைச்சர் விஜய்.
கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது.
நீங்கள் எடுத்துவரும் பொருளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என கடையில் எழுதப்பட்டிருப்பது போல் உள்ளது தவெக ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.