சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார்.
சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி, பேரன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினருடன் தனி விமானத்தில் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வந்தார்.
வழிநெடுகிலும் சாலையோரம் திரண்ட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களுக்கு கையசைத்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். கொடைக்கானல் - வத்தலக்குண்டு, காட்ரோடு, பெருமாள்மலை, மூஞ்சிக்கல் ஆகிய இடங்க ளிலும் ஏராளமானோர் திரண்டு முதலமைச்சருக்கு கையசைத்தபடி வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக தேவதானப்பட்டி அருகே கெங்குவார் பட்டியில் உள்ள கவிஞர் வைரமுத்துவின் தோட்டத்துக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.
பின்னர் கொடைக்கானல் வந்த மு.க.ஸ்டாலின் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அவரை பார்க்க கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமு கர்கள் யாருக் கும் அனுமதி அளிக்கப்பட வில்லை. முதல்வர் வரு கையை முன்னிட்டு கொடைக்கான லில் ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் காலையில் விடுதி வளாகம் அல்லது நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர ஏரியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் அவருடன் உற்சாகமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
மேலும், ஏரியில் தூய்மை பணி மேற்கொண்ட தொழிலாளர்களையும் வர வழைத்து அவர்களிடம் பணி செய்யும் விபரம், நேரம், சம்பளம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். மேலும் தூய்மை பணியா ளர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொண்டதை அறிந்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் வந்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், செம்மறி ஆடு ரோம ஆராய்ச்சி யையம், சூரிய ஆராய்ச்சி கூடம், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங் களை அடுத்தடுத்த நாட்க ளில் பார்வையிட உள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள், ஆள் இல்லா விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். அதே நேரம் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.