தமிழக செய்திகள்

தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம் - நிதி அமைச்சர்

காவிரி, வைகை, தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு மற்றும் நதிகள் மீட்புக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

* மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்.

* முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும்.

* காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

* காவிரி, வைகை, தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு மற்றும் நதிகள் மீட்புக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு

* நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு

* நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு

* காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

* நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம்.

* சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு

* காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

* விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயரில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம்

* கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.

* கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம்.

* மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.