முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ரூ.2,117 கோடி ஒதுக்கீடு
* நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம்.
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.