தமிழக செய்திகள்

தமிழக அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய் - நிதி அமைச்சர்

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

* போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும்.

* போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.

* தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது.

* தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும்.

* கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.

* 2026-27 வருவாய் பற்றாக்குறை ரூ.57,775 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* மாநிலத்தில் நிதி நிலை, நிலை இல்லாமல் உள்ளது.

* தமிழக அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் 2.32 மணி நேரம் உரையாற்றினார்.