தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று கூடியது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி.
வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது.
நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.