தமிழக சட்டசபையில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். அப்போது அவர், டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இறுதியில், மறுப்போர் இல்லை என்பதால் டெட் தொடர்பான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார்.