தமிழக செய்திகள்

TN Assembly Elections | ஒரே குடும்பத்தில் 3 எம்.எல்.ஏ.-க்கள் ஆனால் ஒரு டுவிஸ்ட்!

மூவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்காக களம் கண்டவர்கள் ஆவர்.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று ( மே 04) எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அதிக வாக்குகளை பெற்று 108 தொகுதிகளை கைப்பற்றும் சூழ்நிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பரபரப்புக்கு துளியும் பஞ்சம் இல்லாத அளவுக்கு மக்களின் தீர்ப்பு அமைந்தது. இந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். எனினும், மூவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்காக களம் கண்டவர்கள் ஆவர்.

பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்டின் குடம்பத்தை சேர்ந்த மூன்று பேர் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜூனா, அ.தி.மு.க. வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மற்றும் புதுச்சேரியில் சொந்த கட்சி தொடங்கி போட்டியிட்ட ஜோஸ் சார்லஸ் மார்டின் சட்டசபைக்கு செல்ல இருக்கின்றனர்.

லாட்டரி அதிர் மார்டின் மகன் தான் ஜோஸ் சார்லஸ் மார்டின். மார்டின் மனைவி லீமா ரோஸ் லால்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.