தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 27, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் தலா ஒரு இடத்திலும் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போக, 169 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார்.
இதில், பெரம்பூர் தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் 52.93 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்ற திமுகவின் ஆர்.டி.சேகரை எதிர்த்து பா.ம.க.-வின் திலகபாமாவும், தவெகவின் ஜோசப் விஜய்யும் களம் காண்கின்றனர்.