தமிழக செய்திகள்

TN Assembly Election| திருச்சியில் ஜெயிக்கப்போவது யார்... தொகுதி மக்கள் சொல்வது என்ன?

மாலைமலர் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டறிகிறது.

மாலை மலர்

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்யின் தவெக கவனிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு தரப்பினர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து வரும் நிலையில் மாலைமலரும் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் Vox Pop கேட்டறிகிறது.

அந்த வகையில், திருச்சி பகுதியில் சாமான்ய மக்களிடம் Vox Pop நடத்தப்பட்டதில் திமுகவிற்கு 16 பேரும், அதிமுகவிற்கு 7 பேரும். நாம் தமிழருக்கு 2 பெரும், தவெகவுக்கு 12 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.