தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
விஜய்யின் அரசியல் வருகை காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை ஒட்டி மற்ற கட்சி தலைவர்களை போன்றே த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
த.வெக. தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
காரைக்குடியில் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு நடுவில் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிளில் ரோடுஷோ சென்றார். கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் வாகனத்தில் இருந்தபடி ரோடுஷோ மேற்கொண்டார்.