தமிழக செய்திகள்

TN Assembly Election | திருப்பூரில் திமுக, அதிமுகவை ஓவர்டேக் செய்த தவெக - மக்கள் கூறுவது என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

மாலை மலர்

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

கூட்டணி பலமாக இருப்பதால் தி.மு.க. வெற்றி பெறும் என்றும், பழைய ஆட்சிக்கு தி.மு.க. பரவாயில்லை. தி.மு.க. நன்றாக செய்துள்ளது என்றும் தெரிவித்த பெண்கள், உதய சூரியன் கண்டிப்பாக உதிக்கும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே அதிமுகவில் இருந்தேன் இப்போது திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கே எங்கள் ஓட்டு என்று சிலர் தெரிவித்தனர்.

அரசின் எந்த சலுகையும் எனக்கு கிடைக்கவில்லை. எல்லோரும் சொல்வது போல் மாற்றம் வர வேண்டும் என்றும், ஒரு கட்சிக்கே ஓட்டு போட்டால் எப்படி? இலவசங்கள் எதற்கு கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய பெண் ஒருவர், மாற்றி போடுவோம், மாற்றம் ஏற்பட வேண்டும். விஜய் புதிதாக வந்துள்ளார். இவர் வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என்று தெரிவித்தார்.

புதிதாக வந்தால் ஏதாவது செய்வார், வாய்ப்பு கொடுக்கலாம், ஒரு சான்ஸ் கொடுக்கலாம். எப்போதும் விஜய்க்கு தான் எங்கள் ஆதரவு என்று இளம் தலைமுறையினர், கல்லூரி மாணவிகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் தெரிவித்தனர்.

என் ஓட்டு நாம் தமிழர் கட்சி சீமானுக்கு தான் என்று இளைஞர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருந்தாலும் ஏமாற்றமடைந்தோர் நோட்டாவுக்கு போடப்போவதாக தெரிவித்தனர்.