தமிழக செய்திகள்

TN Assembly Election| ரூ.1000 கோடி சொத்து- தமிழகத்தின் பணக்கார பெண் வேட்பாளர்

இவர் மொத்தம் 164 பக்கம் கொண்ட சொத்து விவர பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். வயது (58). இவர் மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராக உள்ளார்.

சமூக பணிகளில் முனைவர் பட்டமும், இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு ரூ.5.52 லட்சம் தொகையும், தனது கணவர் பெயரில் ரூ. 56.48 லட்சம் தொகையும் கையிருப்பாக உள்ளது. மேலும், தனது பெயரில் 19 கிலோ தங்கமும், 1217 கேரட் வைரமும் மற்றும் 13 கிலோ வெள்ளியும், 33 கிராம் பிளாட்டினமும், கணவர் பெயரில் 281 கிராம் தங்கமும், 9.83 கேரட் வைரமும், 21 கிலோ வெள்ளியும் மற்றும் 321 கிராம் மதிப்பிலான முத்துக்களும் உள்ளன.

லீமா ரோஸ் மார்டினுக்கு ரூ.139.63 கோடி அசையும் சொத்தும், ரூ.909.94 கோடி அசையா சொத்தும், கணவர் பெயரில் ரூ.887.36 கோடி அசையா சொத்தும், ரூ.3262 கோடி அசையும் சொத்தும் உள்ளன. இதுவரை தமிழக வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்துவிபரங்களின் படி பணக்கார கோடீஸ்வரர் பட்டியலில் முதல் இடத்தில் லீமா ரோஸ் உள்ளார். இவர் மொத்தம் 164 பக்கம் கொண்ட சொத்து விவர பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT