தமிழக செய்திகள்

TN Assembly Election| சென்னை மதுரவாயலில் ரூ.5 கோடி பணம் பறிமுதல்

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் கைப்பற்றப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களை அமைத்து தேர்தல் கமிஷன் கண்காணித்து வருகிறது.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் கைப்பற்றப்படுகிறது. உரிய ஆவணம் இல்லாத பொருட்களும் பிடிக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை மதுரவாயல்- போரூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது தனியார் ஏஜென்சி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் டாஸ்மாக் கடைகளில் வசூலானது என கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து உரிய ஆவணம் கொண்டு வந்ததை அடுத்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT