தமிழக செய்திகள்

TN Assembly Election | நெருங்கும் சட்டசபை தேர்தல் ... தலைவர்கள் எங்கெங்கு இன்று பிரசாரம்?

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 21-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தலைவர்களின் இன்றைய பிரசார விவரம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- மாலை 4 மணி- ஓசூர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கரூர், ஈரோடு.

த.வெ.க. தலைவர் விஜய்:- திருச்சி கிழக்கு.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- கீழ்வேளூர், நாகப்பட்டினம், நன்னிலம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- நெல்லை, பாளையங் கோட்டை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:- பெரம்பலூர், குன்னம், உளுந்தூர்ப்பேட்டை.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:- விழுப்புரம். திண்டிவனம்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- நன்னிலம் (குடவாசல்). வேதாரண்யம் (செம்போடை), கீழ்வேளூர் (பிராதாமபுரம்). மயிலாடுதுறை. பூம்புகார் (செம்பொனார்கோவில்)

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- அவினாசி, கோவை தெற்கு.

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்:- திருச்செந்தூர், ராதாபுரம். அம்பாசமுத்திரம்.

நடிகர் சத்யராஜ்:- மாதவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல்