தமிழக செய்திகள்

TN Assembly Election | காட்பாடி தொகுதிக்கு விருப்ப மனு: முதலமைச்சர் துரைமுருகனிடம் நேர்காணல்

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாயலத்தில் நேர்காணல் நடத்தி வருகிறார்.

மாலை மலர்

சென்னை:

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாயலத்தில் நேர்காணல் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகனிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் டாக்டர் நந்தகுமார், சிவக்குமார், முரளிபாஸ்கர் ஆகிய 4 பேரும் விருப்ப மனு கொடுத்திருந்தனர். இவர்கள் இன்று நேர் காணலில் பங்கேற்றனர்.

அமைச்சர் துரைமுருகனிடம் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அமைச்சர் துரைமுருகன் இதுவரை 10 தேர்தல்களில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.