திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி தேர்தலின் போது ஓட்டு கேட்டு எங்க ஊருக்கு யாரும் வர வேண்டாம் என வினோத பேனர் ஒன்று வைத்தனர்.
அதில் வருகிற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம், தயவு செய்து ஓட்டு கேட்டு யாரும் எங்கள் ஊருக்கு வர வேண்டாம், போலியான மற்றும் அரசு அங்கீகரிக்கப்படாத போலி ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
அதனை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
80 ஆண்டு காலமாக எங்கள் ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். குடிநீர் வசதி வேண்டும். ரேஷன் கடை வேண்டும். ஜவ்வாது மலை பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லை. பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தயவு செய்து எங்க ஊருக்கு ஓட்டு கேட்க யாரும் வர வேண்டாம். மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.