தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? - உடனே அறிந்துகொள்ள ஏற்பாடு தயார்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அங்கு செல்வது வீண். எனவே இன்றே அதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியல் பெயர் இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? வாக்குப்பதிவுக்கு என்னென்ன ஆவணங்கள் கொண்டு சென்றால் வாக்களிக்க முடியும்? ஆகிய தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை அறிந்து கொள்வதற்கு 1950 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் EPIC என்ற வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பலாம். உதாரணமாக EPIC IQR1251510 டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம். EPIC என்ற வார்த்தைக்குப் பிறகு இடைவெளி விட்டு நம்பரை டைப் செய்ய வேண்டும். இதன் மூலம் வாக்குசாவடி, வரிசை எண், பாகம் எண் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக, இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். அதற்காக https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net இணையதளங்களை அணுக வேண்டும்.

மேலும், ECINET, Votershelpline, Sweetha செயலிகள் மூலமாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பு, வாக்குச்சாவடி எங்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுவீடாக தரப்படும் வாக்காளர் தகவல் சீட்டிலும் (பூத் சிலிப்) வாக்களிக்கத் தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும்.

இந்த அனைத்து விவரங்களையும் அறிந்த பின்பு வாக்குச்சாவடிக்கு சென்றால் எளிதாக வாக்களித்துவிட்டு வரலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அங்கு செல்வது வீண். எனவே இன்றே அதை உறுதி செய்துகொள்ளுங்கள்.