தமிழக செய்திகள்

TN Assembly Election | ரூ.8000 கூப்பன்... தாய்மார்கள் எல்லாம் ஹேப்பி - மு.க.ஸ்டாலின்

இந்தியாவிற்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* விருதுநகர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம்.

* விருதுநகர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 40,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

* திமுக தேர்தல் வாக்குறுதியை கேட்டு தமிழ்நாட்டு தாய்மார்கள் எல்லாம் மிகவும் ஹேப்பியாக இருக்கிறார்கள்.

* திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* ரூ.8000 கூப்பன் திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

* இந்தியாவிற்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.