விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராசர் தான் நம் நினைவுக்கு வருவார்.
* சென்று வந்த அனைத்து தொகுதியிலும் திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் டபுள் ஓகே சொல்லிவிட்டனர்.
* அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளர் தயாரில்லை என தகவல்.
* விருதுநகரில் போட்டியிடும் தேமுதிகவின் விஜயபிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
* அருமை நண்பர் விஜயகாந்த் படத்தில் ஒரு பாடலுக்கு நடித்தது ஞாபகம் வருகிறது.
* படத்தில் விஜயகாந்துக்காக வாக்கு கேட்டேன். இன்று அவரது மகனுக்காக ஓட்டு கேட்கிறேன்.
* மக்கள் ஆணையிட்டால் படத்தில் விஜயகாந்திற்கு ஓட்டு கேட்டு நடித்தேன். இன்று அவரது மகனுக்கு வாக்கு கேட்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.