தமிழக சட்டசபை தேர்தலுக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய நாளில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4-ந்தேதி எண்ணப்படுகின்றனர். இதனிடையே, வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே அ.தி.மு.க. சார்பில் மாதவரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி போட்டியிடுகிறார். இதனால் தனது ஆதரவாளர்களுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின் போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மாதவரம் தொகுதிக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் விவரம் வருமாறு:-
* நீர்நிலைகளை காக்கும் தொலைநோக்குப் பணியாக கன்னியம்மன்பேட்டை குளம் 2012ல் அம்மா திட்டத்தின் கீழ் முழுமையாக கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டன.
* 2012ல் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி மக்களின் அத்தியாவசிய தேவைக்கு நிரந்தர தீர்வு.
* கல்வி தொடர்ச்சிக்காக சென்னை மாநகராட்சி வலுப்படுத்தப்பட்ட நடுநிலைப் பள்ளி.
* மணலி பகுதியின் முக்கிய உயிர்நாடி CPCL சாலை. 2013ல் புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் அமைக்கப்பட்டு, இன்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக...
* மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த விலையில் உணவை வழங்குவதை நோக்கமாக கொண்டு மணலி நியூ டவுனில் புரட்சித் தலைவி அம்மா உணவகம் அமைக்கப்பட்டது.
* 2013ல் கட்டப்பட்ட சடையன்குப்பம் பூங்கா.
* 2013ல் உருவான ஐயாகோவில் பேருந்து நிறுத்தம். மக்களின் தினசரி பயணத்திற்கு தீர்வு.
* 2014ல் கட்டப்பட்ட அம்பேத்கர் நகர் பாலம் மக்களின் பயணத்தை எளிதாக்கிய இணைப்புப் பணி.
* 2014ல் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் மாத்தூர் நகர்ப்புற மருத்துவமனை.
* மாத்தூர் கல்லறைத் தோட்டம்.
* 2016ல் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட மாத்தூர் MMDA பூங்கா.
* மக்களின் மன நிம்மதிக்காக 2016ல் கட்டப்பட்ட மாத்தூர் தியான மேடை.
* 2016ல் கட்டப்பட்டராயல் பேலஸ், மாத்தூர் மக்களின் நிகழ்வுகளுக்கும் பொது பயன்பாட்டிற்கும் உருவான இடம்.
* மக்களுக்கு தரமான மற்றும் குறைந்த விலையில் உணவை வழங்குவதை நோக்கமாக கொண்டு 2016ல் கட்டப்பட்ட மாத்தூர் அம்மா உணவகம்.
* 2014ல் கட்டப்பட்ட மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக...
* அம்பேத்கர் MMC மெடிமிக்ஸ் சாலை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) மக்கள் நல வளர்ச்சியின் அடையாளம்.
* தபால்பெட்டி கவுன்சிலர் அலுவலகம். புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் உருவான மக்கள் சேவை மையம் (2016).
* தபால்பெட்டி KKR கார்டன் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் உருவான மக்கள் நலப் பூங்கா (2013).
* தபால்பெட்டி- குடிநீர் & கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) மக்கள் ஆரோக்கியத்திற்காக உருவாக்கப்பட்டது.
* தபால்பெட்டி அம்மா உணவகம்... புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் எளிய மக்களுக்கு எளிய விலையில் உணவு.
* தபால்பெட்டி- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (பால்வாடி) புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) சிறார்களின் எதிர்காலத்திற்காக கட்டப்பட்டது.
* தபால்பெட்டி - குழந்தைகள் விளையாட்டு மைதானம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) சிறார்களின் விளையாட்டு மற்றும் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டது.
* தபால்பெட்டி- தெருவிளக்கு வசதி புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) மக்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டது.
* அருள்நகர்- திருவள்ளுவர் தெரு, அலெக்ஸ் நகர் பூங்கா புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டது.
* அருள்நகர்- சென்னை மெட்ரோ குடிநீர் வசதி புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2013) மக்கள் நலனுக்காக வழங்கப்பட்டது.
* எம்.எம்.சி- M2 காவல் நிலையம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் மக்கள் பாதுகாப்பிற்காக மேம்படுத்தப்பட்டது.
* விஆர்டி நகர் பூங்கா புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2016) மக்கள் ஓய்வு மற்றும் நலனுக்காக அமைக்கப்பட்டது.
* அம்மா உணவகம் (2015) புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு.
* மாதவரம் நகராட்சி அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2014) மக்கள் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது.
* தாட்டாங்குளம் சாலை- மாதவரம் சந்தை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் (2012) மக்கள் மற்றும் வணிக வளர்ச்சிக்காக மேம்படுத்தப்பட்டது.
* மாதவரம் MMBT பேருந்து நிலையம் (8 ஏக்கர் பரப்பளவில்) 2018-அம்மா ஆட்சி மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் உருவாக்கப்பட்டது.
* மாதவரம் - பெரியார் பேருந்து நிறுத்தம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் மக்கள் பயண வசதிக்காக அமைக்கப்பட்டது.
* ஆட்டர் ரிங் ரோடு விளையாட்டு மைதானம் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டது.
* மாதவரம் தொடக்கப்பள்ளி புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் சிறார்களின் கல்விக்காக மேம்படுத்தப்பட்டது.