தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி கோவையில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.
அதில் அப்பகுதி மக்களிடம் 43 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டது. அந்த கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக 22 பேர் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக கட்சிக்கு 10 பேரும் தவெக கட்சிக்கு 9 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 2 பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான் என்பது குறிப்பிடத்தக்கது.