தமிழக செய்திகள்

TN Assembly Election| IJK வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஐனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பல்லாவரம், குன்னம் ஆகிய தொகுதிகளில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது.

இதனை தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாரிவேந்தர் அறிவித்தார்.

அதன்படி, குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகனும், பல்லாவரம் தொகுதியில் வழக்கறிஞர் வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக்கருதி புதியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதாக பாரிவேந்தர் கூறினார்.

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.