தமிழக செய்திகள்

திமிர் பிடித்தவர்.. மோசமான குணம் படைத்தவர் - செங்கோட்டையனை விளாசிய எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்தே இல்லை. செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதா கூறினார்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார்.

* செங்கோட்டையன் திமிர் பிடித்தவர். மோசமான குணம் படைத்தவர்.

* கட்சித் தொண்டர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டவர் செங்கோட்டையன்.

* செங்கோட்டையன் மீது அவரது மனைவி, மகன் புகார் அளித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

* ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்தே இல்லை. செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதா கூறினார்.

* எனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக செங்கோட்டையன் கண்ணீர் வடித்தார்.

* முதலமைச்சராக இருந்தபோதே ஆதாரங்களை சேகரித்து விட்டேன். செங்கோட்டையனுக்கு எதிராக அவ்வளவு ஆதாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.