தமிழக செய்திகள்

DMK தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்- பெண்களை கவரும் அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பு

இந்த முறை தி.மு.க. எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை:

தேர்தல் என்றாலே ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் கவனம் பெறும். எந்த கட்சிகள் எந்த அறிவிப்பினை வெளியிடுகிறார்கள் என்பதை பார்த்தும் சில வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதுண்டு.

இதனால் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு தேர்தலின் போதும் ஹீரோவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தி.மு.க. வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியினை செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசாரம் என தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க.வும் வேகம் எடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்த முறை சற்று தாமதமாகவே நேற்று தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்று கூறியிருந்தார். இதையடுத்து தான் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்று வெளியாகும் என தெரிவித்தார். இதன்படி இன்று மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்த முறை தி.மு.க. எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், முதியோர், அரசு ஊழியர்கள் என பலரையும் கவரும் விதமாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மகளிர் வாக்குகளை கவரும் விதமாக புதிய அறிவிப்புகள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க. 291 அறிவிப்புகளுடன் தேர்தல் வாக்குறுதியை கடந்த வாரம் வெளியிட்டது. முதல் கட்டமாக வெளியிட்ட அறிவிப்பில், வரிச்சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும் என்று அறிவித்தார். அதே போல, குல விளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்​கும் நகரப் பஸ்களில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். அதே போல, வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ் இலவசமாக அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.