தமிழக செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்... தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின் தீவிர வாக்கு சேகரிப்பு

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் சட்டமன்ற திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆஸ்டின் இன்று பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள விநாயகர் கோவில் முன்பு இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

முன்னதாக அங்குள்ள விநாயகர் கோவில் மற்றும் அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தோழமை கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் திறந்த வாகனத்தில் பிரசாரத்தை தொடங்கினார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

கட்டையன்விளை, ஆசிர்வாதம் நகர், பரமார்தலிங்கபுரம், நெசவாளர் காலனி, கேசவதிருத்துவபுரம், பள்ளிவிளை உட்பட நாகர்கோவில் மாநகராட்சி 5,6,7,8,9,10,11 ஆகிய வார்டுகளில் திறந்த வாகனத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசார பயணம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில உணவுத்துறை ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மாநில செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி உட்பட தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.