தமிழக செய்திகள்

TN Assembly Election | தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை

பொது காவல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தமிழக தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தலைவர்கள் தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அனல் பறக்கும் பிரசாரம் ஒரு புறம் நடக்கும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனையில் காணொலி வாயிலாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றார். மேலும் பொது காவல் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தேர்தல் ஏற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT