தமிழக செய்திகள்

TN Assembly Election| எத்தனை பொய்களை சொன்னாலும் இந்தமுறை திமுக தோற்று ஓடப்போவது உறுதி- அண்ணாமலை

தமிழகத்திற்கு தொகுதிகளை குறைத்து விடுவார்கள் என்று அடிப்படை உண்மையில்லாத பொய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்தாண்டு காலமாக, தமிழகத்தில் தீயசக்தி திமுகவின் ஏமாற்று வித்தைகளையும், ஊழல் முறைகேடுகளையும் பார்த்த மக்கள் திமுக ஆட்சியை விரட்டியடிக்க காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் பரமசிவம் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன்

அவர்களுடன் இணைந்து பங்கேற்று உரையாற்றினேன்.

விவசாய பெருமக்கள் அதிகம் வசிக்கும் வேடசந்தூர் தொகுதி உறுப்பினராக இருந்த சுவாமிநாதன் அவர்கள் செய்த ஒரே சாதனை, அமலாக்கத்துறையை வேடச்சந்தூருக்கு அழைத்து வந்தது தான். இவர் செய்த முறைகேட்டால், தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லம் கரைந்து ஓடியதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை நேரடியாக 50% உயர்த்துவதற்கான சட்டதிருத்தத்தை மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு தொகுதிகளை குறைத்து விடுவார்கள் என்று அடிப்படை உண்மையில்லாத பொய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக எத்தனை பொய்களை சொன்னாலும், இந்தமுறை திமுக தோற்று ஓடப்போவது உறுதி.

வேடசந்தூர் தொகுதி வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் V.P.B.பரமசிவம் அவர்களை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் வளரட்டும்! என்று கூறியுள்ளார்.