தமிழக செய்திகள்

நாளை தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை- தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று 17,527ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237, சென்னை- கோவைக்கு ரூ.12,027ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.