தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 3,25,79,329 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
திருவள்ளூர் 55.45 சதவீதம், செங்கல்பட்டு 56.28 சதவீதம், வேலூர் 58 சதவீதம், ராணிப்பேட்டை 58.62 சதவீதம், விழுப்புரம் 59.23 சதவீதம், திருப்பூர் 62.97 சதவீதம், நீலகிரி 50.42 சதவீதம், ஈரோடு 61.79 சதவீதம், நாமக்கல் 62.51 சதவீதம், சேலம் 61.42 சதவீதம், கரூர் 60.77 சதவீதம், மதுரை 58.18 சதவீதம், ராமநாதபுரம் 51.54 சதவீதம், அரியலூர் 55.18 சதவீதம், பெரம்பலூர் 57.55 சதவீதம், நாகை 57.11 சதவீதம், திண்டுக்கல் 59.79 சதவீதம், விருதுநகர் 57.27 சதவீதம், நெல்லை 50.40 சதவீதம், தூத்துக்குடி 52.55 சதவீதம், கன்னியாகுமரி 50.33 சதவீதம்.