தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருவள்ளூர்- 17.8 சதவீதம், திருவண்ணாமலை- 17.73 சதவீதம், ஈரோடு- 19.38 சதவீதம், மதுரை 17.08 சதவீதம், நாகை- 17.51 சதவீதம், திருநெல்வேலி-15.96 சதவீதம், கன்னியாகுமரி 17.08 சதவீதம், பெரம்பலூர்- 17.68 சதவீதம்
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் இதே 9 மணி நிலவரத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.