தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.
இந்தநிலையில் தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று காலை கூடியது.
தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.
சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார்.