ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் உள்பட பல்வேறு தனித்தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இன்று காலை அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இந்நிலையில், ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.