தமிழக செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு: மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.ராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமி நாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன்,நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மறைவுக்கு சட்டசபையில் இன்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெ ரும் தலைவர் நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவு குறித்தும் இன்று சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

இவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்- அனுதா பம் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காக்குமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 மணித் துளிகள் அமைதி காத்தனர்.