தமிழக செய்திகள்

பல தலைவர்களின் சவால்களைப் பார்த்த இயக்கம் தி.மு.க: ஆதவ் அர்ஜூனாவை சாடிய டி.கே.எஸ்.இளங்கோவன்

நீங்கள் நடத்துகிற ஆட்சியைப் பார்த்தால் அடுத்து கவுன்சிலராக கூட வரமுடியாது என்றார்.

தி.மு.க. செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி வருமாறு:

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தி.மு.க.வுக்கு சவால் விடும் வகையில் இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும்போது தி.மு.க.வால் ஒரு மேயர் பதவியை கூட கைப்பற்ற முடியாது என்று பேசி இருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா ஒவ்வொரு கட்சியாக மாறி மாறி சென்றவர். இப்போது த.வெ.க.வுக்கு ‘ஜால்ரா’ தட்டுகிறார் அவ்வளவுதான்.

திடீர் பொறுப்புக்கு வந்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது பதவியின் கண்ணியத்தை மறந்து ஒருமையில் சவால் விட்டு பேசுவது அநாகரீகமானது.

நீங்கள் நடத்துகிற ஆட்சியைப் பார்த்தால் அடுத்து கவுன்சிலராக கூட நீங்கள் வர முடியாது. ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டை அந்த அளவுக்கு சீரழித்து விட்டீர் கள்.

அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும்போது எத்தனை பேர் ஜெயிப்பீர்கள் என்று பாருங்கள். 10 பேர் கூட தேற மாட்டீர்கள்.

பல தலைவர்களின் சவால்களைப் பார்த்த இயக்கம் தி.மு.க.

உங்களைவிட பெரிய தலைவர்களான ஜெயலலிதா சவால்களை எல்லாம் பார்த்து முறியடித்த இயக்கம் தி.மு.க.

எனவே தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. எழுந்து நிற்கும். மீண்டும் வெற்றி பெறுவோம்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுக்கு தி.மு.க. தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.