சிறுமியை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர் 
தமிழக செய்திகள்

வீட்டின் கதவு மூடியதால் 2 வயது சிறுமி தவிப்பு

சாவி வீட்டின் உள்ளே இருந்த நிலையில் “ஆட்டொமெட்டிக் லாக்” என்பதால் கதவு மூடிக் கொண்டது

கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடைய வீட்டிற்குள் சிக்கிய சிறுமி பயத்தில் அலறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எல்லையம்மன் கோவில் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் குமாரசாமி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

கதவு

இன்று காலை குமாரசாமி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த பிரியா வெளியே நின்றபடி தனது பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த அவரது மகள் திடீரென வீட்டிற்குள் ஓடிச்சென்று கதவை மூடினார்.

சிறுமி

அதன் சாவி வீட்டின் உள்ளே இருந்த நிலையில் “ஆட்டொமெட்டிக் லாக்” என்பதால் கதவு மூடிக் கொண்டது. இதனால் கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடைய வீட்டிற்குள் சிக்கிய சிறுமி பயத்தில் அலறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள்

தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் பிரதாப் தலைமையில் விரைந்து வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த கருவி மூலம் சுமார் அரைமணிநேரம் போராடி கதவை லாவகமாக திறந்தனர். பின்னர் வீட்டிற்குள் சிக்கிய சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களுக்கு சிறுமியின் தாய் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT