தமிழக செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 24 வரை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை மகா தீபம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 24 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.

கார்த்திகை தீபம் கிரிவலத்தின் உச்சகட்ட நிகழ்வாக உள்ளது; அருணாச்சல மலையை சுற்றியுள்ள சுமார் 14 கிலோமீட்டர் வெறுங்கால நடைப்பயணம், தீபம் நாளன்றும் அதை சுற்றியுள்ள நாட்களிலும் ஆண்டின் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கிறது.

இதையடுத்து நவம்பர் 23 இரவு முதல் நவம்பர் 24 இரவு வரை பெளர்ணமி மற்றும் தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

அதையடுத்து நவம்பர் 24, அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நவம்பர் 24, மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் உச்சத்தில் நெய் மற்றும் மூலிகை தைலம் நிரப்பிய கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, நவம்பர் 24 அன்று பக்தர்கள் அண்ணாமலை மலை மீது ஏற மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT