தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே தொழிலாளி தவறி விழுந்து பலி

திருவள்ளூர் அருகே தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (36). இவர் கடந்த 2 மாதங்களாக மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் தங்கி சுற்றுப்புறப் பகுதியில் புதிதாக தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

போலீசார் விசாரணை

புதுப்பட்டு கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் வீட்டின் மேல் தகடு கூரை அமைக்கும் போது திடீரென பிரசாந்த் ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT