திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடுநிலையான ஒருவர் கோவில் நிர்வாகம் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தூணில் தீபம் ஏற்றுமாறு முன்பு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர்.
அப்போது," உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாதது வேதனை அளிக்கிறது. உத்தரவுகள் மெத்தனமாக கையாளப்படும் பொழுது நாங்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.
திருப்பரங்குன்றம் தீப சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது.இந்த சூழலை இரும்புக்கரம் கொண்டு கையாளாவிட்டால் அது அரசியலமைப்புச் சீர்குலைக்கு வழிவகுக்கும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தூணில் தீபம் ஏற்றாதது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்பித்த அறிக்கையின் மூலம் அவர் முதலை கண்ணீர் வடித்துள்ளார்.
உத்தரவை நிறைவேற்றாததற்கான பழியை முழுவதுமாக கோவில் நிர்வாகத்தின் மீது சுமத்த ஆட்சியர் முயற்சித்துள்ளார். கோவில் செயல் அலுவவ
தங்கள் அரசியல் மேலதிகாரிகளின் கட்டளைகளுக்கு இணங்கி செயல்பட்டதாகத் தெரிகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில் அறங்காவலர்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் உச்சநீதிமன்றம் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்குமாறு கேட்டு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவணங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல் அனைத்தையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டுள்ளது. மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை கார்த்தை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துக்கொண்டு போய் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கதாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தர்கா செயல்படுவதில் எந்த ஒரு தடங்களும் இருக்கக் கூடாது.
தர்கா மற்றும் கோவில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அந்த பகுதியில் வேலி அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அனைத்து இடங்களிலும் விளக்கு ஏற்றலாம். தர்காவிற்கு தொழுகை நடத்த வருபவர்களுக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதை சிஆர்பிஎப் உறுதி செய்ய வேண்டும்.