திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தூணில் தீபம் ஏற்ற கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தூணில் தீபம் ஏற்றவில்லை என தொடர்ந்த அவமதிப்பு வழக்கு மீது மனுதாரர்கள், மாவட்ட ஆட்சியர், தொல்லியல் துறை தரப்பில் வாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளை மீண்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை வெறும் தமிழ்நாடு சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது.
இந்த நாடு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பபைத உறுதி செய்யும் உறுதியான நடவடிக்கை தேவை.
நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் என்ன விளைவு ஏற்படும் என்பத அனைவருக்கும் தெரிய வேண்டும் என தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது உத்தரவை செயல்படுத்தினீர்களா? இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்விக்கு ஆம் செயல்படுத்தினோம் என ஆட்சியர் தரப்பு பதிலளிக்கப்பட்டது.
அப்படி செய்திருந்தால், எதிற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் வரப்போகிறது? என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.
தொல்லியல் துறை அதிகாரிகளை நாங்கள் தீபத்தூணின் அருகே செல்ல விடவில்லை என்பது பொய்யான தகவல். மொட்டை கடிதம்போல் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறது தொல்லியல் துறை.
தொல்லியல்துறை கலந்தாலோசிக்கவில்லை, மலைமேல் அவர்களை அனுமதிக்கவில்லை என்பது அனைத்தும் பொய்.
காலை 7.38 மணிக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளன. தொல்லியல்துறை அதிகாரிகள் மலை உச்சி சென்றது போட்டோ ஆதாரம் உள்ளது.
எஸ்பி ஒருவர் தொல்லியல் துறை அதிகாரிகளை தடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால், அவர் பெயரை குறிப்பிடவில்லை.
உச்சநீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு வழங்கிய அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. பாரம்பரிய, மத அல்லது சொத்துரிமையை அங்கீகரிக்கும் வகையில் அனுமதி வழங்கடவில்லை.
தேவஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழு மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொல்லியல் துறையின் அறிக்கையில் கையெழுத்திட்ட அதிகாரியே மலை உச்சியில் இருந்தார்.
தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரியும் கூட்டத்தில் இருந்தார்.
தங்களுடன் ஆலோசிக்கவில்லை என தொல்லியல் துறை கூறுவது நீதிமன்றத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியர் என்ற முறையில் உங்களுடைய பொறுப்பு.
ஆட்சியர் இவ்வாறு கூறுவது அரசியலமைப்பின் சீர்குலைப்பு என்ற சிக்கலான நிலையை ஏற்படுத்தி விடாதா?
கோயில் நிர்வாகம், அறங்காவலர் கருத்து அடிப்படையில் தீர்ப்பை நிறைவேற்றவில்லை எனக்கூறுவது சரியா?
கோவில் விவகாரத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்திவிட முடியாது என மதுரை ஆட்சியர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மரபு, ஆகம விதி கடைபிடிக்க வேண்டியுளளதால் கோவில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாகரீதியாக செயல்படுத்திவிட முடியாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத வழக்கில் இன்றைய தினமே நாங்கள் சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்க போகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.