தமிழக செய்திகள்

திருச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் காரணமாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவும் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.

லோகவாணி காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர்

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்–பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகளான லோகவாணி, சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவருக்கு கடந்த சில நாட்களாக விட்டு விட்டு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுகாதார சீர்கேடு

மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் காரணமாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவும் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. தற்போது லோகவாணி காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT