திருச்சி அருகே குளவி கொட்டியதில் 5 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பையை சேர்ந்தவர் பூபதி. விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் அன்சிகா என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று அன்சிகா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, ஒரு குளவி அன்சிகாவை கொட்டியது. இதனால் வலியால் அலறி துடித்த அவளை குடும்பத்தினர் மீட்டு புதூர் உத்தமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இந்தநிலையில் அன்சிகா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.