தமிழக செய்திகள்

திருச்சி அருகே விவசாயி தலை துண்டித்து படுகொலை

கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியனை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 49). விவசாய தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் முதல் மகளுக்கு திருமணமாகி பக்கத்து தெருவில் வசித்து வருகிறார்.

தலை துண்டித்து கொலை

பாண்டியன் தனது தோட்ட வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களால் பாண்டியனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் தப்பியோவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேசும் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, பாண்டியனை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT