கொலை செய்யப்பட்ட நடராஜன் 
தமிழக செய்திகள்

திருச்சி அருகே முன்விரோதத்தில் முதியவர் அடித்துக்கொலை- பெண் உள்பட 3 பேர் கைது

போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் வடக்கு புலிவலத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 65). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அருகே உள்ள ஒரு வயலில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

முதியவர் மீது தாக்குதல்

அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த வீரமணி, மகாமணி, சித்ரா ஆகியோர் வயலுக்கு சென்று நடராஜனை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தனர். இந்தநிலையில் திடீரென்று மகாமணி இரும்பு கம்பியாலும், வீரமணி பாட்டிலாலும் நடராஜனை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த நடராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக நடராஜன் மகன் பாரதிதாசன் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, மகாமுனி, வீரமணியின் மனைவி சித்ரா ஆகியோரை கைது செய்தனர். இந்தநிலையில் நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT