தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சிறுவர், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 சிறுமிகள் மாயமான சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அரசுப் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (அக்.26) பள்ளி சென்ற 8,9, மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று இன்று பெற்றோர்கள் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செஞ்சி சிறுமியே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர் இடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.