தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, மாநில உள்துறைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ரூபேஷ்குமார் மீனாவிற்கு பதில் குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சி.ஐ.டி. ஐ.ஜி ஆக இருந்த ரூபேஷ்குமார் மீனா, திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் ஆணையராக இருந்த காமினி ஐ.பி.எஸ்., காவல்துறை தலைமைய நிர்வாக ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.