தமிழக செய்திகள்

காரில் 4 பேர் உடல் கருகி பலி... கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை

மாலை மலர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த நிலையில் உள்ள காரில் 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் பனங்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திசையன்விளை காவல்துறையினர் கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. மற்றும் தடயவியல் துறையினர் காரில் வந்தவர்கள் யார்? அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது விபத்தா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.