தமிழக செய்திகள்

பதிலுரைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.. நன்றாக தயார் செய்து வாருங்கள்- முதலமைச்சருக்கு சவால்விட்ட உதயநிதி

உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான்

கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.

தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.

திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.

காவல் மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, சாரியும் கிடைக்கவில்லை.

முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.

எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?

உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின்

நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் என்றும் நேரடியாக உடனடியாக பதில் கூறவில்லை.

டிவி சீரியலில் இனி இவருக்கு பதில் அவர் என கார்டு போடுவதுபோல குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டும் தான் பதில் கூறுகிறார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

திங்கட்கிழமை அன்று உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும் என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்," நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு 3 நாட்கள் தயாராகி வந்து முதலமைச்சர் திங்களன்று பதிலளிப்பார் என நினைக்கிறேன். நன்றாக தயார் செய்து வாருங்கள், தேவையற்ற குட்டிக்கதைகள் கூறாமல் லாஜிக்கின்றி பேசாமல் உரிய ஆதாரத்துடன் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். டேக் டைவர்ஷன் இன்றி முதலமைச்சர் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.

முதலமைச்சர் தயாராகி வரவேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் தயாராகி முதலமைச்சர் விஜய் தற்போதே தயாராக தான் இருக்கிறார். தங்கட்கிழமை பதில் அளிப்பார்.

அமைதியாக அமர்ந்திருக்கிறார் என நினைக்க வேண்டாம், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று சபாநாயகர் கூறினார்.